தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் சாலையில் சிதறிக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரிசி கிடங்கு உள்ளது. இந்த கிடங்கிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு ,எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் ஒடசல்பட்டி பகுதியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் நேற்று இரவும் கடத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரிசி கிடங்கிற்கு கொண்டுச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் சாலையில் தறிகெட்டு ஓடியது. சாலையோரங்களில் இருந்த புளியமரக்கிளைகளில் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் சிக்கி கீழே விழுந்தன. இதனை, லாரியின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சையளிக்க அலட்சியம் காட்டும் மருத்துவர்கள்; நோயாளிகள் அவதி!
அதன் பின்னர், லாரியை சாலையோரமாக நிறுத்திய போதை ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து கடத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் சாலையில் சிதறிக்கிடந்த அரிசி மூட்டைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
No comments:
Post a Comment