வேலூர் மாவட்டம் ஜாபரா பேட்டை பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சங்கீதா (37). இவருக்கு ஏர்டெல் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் பரிசு தொகை தருவதாக சொல்லி ஏமாற்றி அவரது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை கேட்டு ரூபாய் 35, 975 அவருக்கே தெரியாமல் அவரது வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் எடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசார் மோசடி நபரின் வங்கிக் கணக்கை முடக்கி அவர் இழந்த மொத்த பணத்தையும் மீட்டனர்.
அந்த பணத்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் இன்று சங்கீதாவிடம் வழங்கினர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை யாருக்கும் பகிர வேண்டாம் என்று அறிவுரை வழங்கினர்.
No comments:
Post a Comment