நாடு முழுதும் முழு ஊரடங்கு - அதிகரிக்கும் கொரோனாவால் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 15, 2022

நாடு முழுதும் முழு ஊரடங்கு - அதிகரிக்கும் கொரோனாவால் அதிரடி!

10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, சீனாவில், 10 நகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சாங்சுன், ஜிலின், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீனாவின் பெரிய நகரமான ஷாங்காயில், சில குடியிருப்புகள் மற்றும் அலுவலகப் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, மூன்று மாகாணங்களில் கொரோனா பரவலை தடுக்கத் தவறியதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள், 26 பேரை சீன அரசு பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad