அடி தாங்க முடியலை குருவே.. "நேட்டோ"வே வேண்டாம்.. இறங்கி வரும் உக்ரைன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 16, 2022

அடி தாங்க முடியலை குருவே.. "நேட்டோ"வே வேண்டாம்.. இறங்கி வரும் உக்ரைன்!

ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதால் நேட்டோவில் சேரும் திட்டத்தைக் கைவிட உக்ரைன் முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமாகி வருகிறது. நேட்டோ நாடுகளும் பெரிதாக உதவ முடியவில்லை. அமெரிக்காவே பயந்து போய்க் கிடக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறும் உக்ரைன், நேட்டோவில் சேரும் திட்டம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா தாக்கினால் நேட்டோ வரும், அமெரிக்கா வரும், ஐரோப்பா வரும்.. அடித்து துவம்சம் செய்து விடலாம் ரஷ்யாவை என்றுதான் தைரியமாக இருந்தது உக்ரைன். ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக போய் விட்டது. யாருமே வரவில்லை, அதாவது நேரடியாக வரவில்லை, வர முடியவில்லை. ரஷ்யாவின் உக்கிரம் அப்படி இருக்கிறது.

அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ நேரடியாக தலையிட்டால் தொலைத்து எடுத்து விடும் கோபத்தில் இருக்கிறது ரஷ்யா. இதை உணர்ந்துதான் அமெரிக்கா கப்சிப்பென்று வெளியில் இருந்தபடி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் கூட "நோ பிளை ஸோன்" அறிவிக்காமல் இருக்கிறது. நேட்டோவில் சேர வேண்டும் என்பதுதான் உக்ரைனின் விருப்பம். அமெரிக்காவும் உக்ரைனை உள்ளே இழுத்துப் போட ரொம்ப ஆர்வம் காட்டுகிறது. இதனால்தான் ரஷ்யா கோபமாகி வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதல் கொஞ்சம் கூட தணியாத நிலையில், இதற்கு மேலும் நேட்டோவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் நிலைமை மோசமாகி விடும் என்று உக்ரைன் உணர ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து நேட்டோவில் சேரும் எண்ணத்தில் உக்ரைன் இல்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம், உக்ரைனும் இதை ஏற்க வேண்டும். எங்களால் ஒரு அமைப்பில் சேர முடியாதபோது, எங்களது மக்களைக் காக்கும் வழியைத்தான் நாங்கள் யோசிக்க வேண்டும். எங்களது பாதுகாப்பு முக்கியமானது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை நாங்கள் நம்புகிறோம். அது நடக்கக் கூடியதே. ரஷ்யாவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் செல்கிறது. இருப்பினும் முக்கியமான திருப்பம் இதுவரை ஏற்படவில்லை என்றார் அவர்.

அதேசமயம், நேட்டோவில் இணைய மாட்டோம் என்பதை உக்ரைன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. மேலும் உக்ரைனிலிருந்து பிரிந்து போன மாகாணங்களான கிரீமியா, லூஹான்ஸ்க், டோனெட்ஸ்க் ஆகியவற்றை உக்ரைன் மற்றும் சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
மறுபக்கம் ஐரோப்பிய கவுன்சிலிலிருந்து வெளியேற ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதற்கான வேலைகளையும் அது தொடங்கியுள்ளது. ஒருபக்கம் உக்ரைனுடன் பேச்சு நடத்தினாலும் கூட தனது தாக்குதலை ரஷ்யா சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை. மாறாக தொடர்ந்து உக்ரைன் மீது கடுமையான போர் புரிந்து வருவதால் உக்ரைன் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad