ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுபோக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டு இருந்தது.
இதன் பின்னர் நாளடைவில் கொரோனா நோய் பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அதிரடியாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.
அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் (16089), ஜோலார்பேட்டை- சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் (16090), நிலம்பூர் சாலை- கோட்டயம் விரைவு ரயில் (16325), கோட்டயம்- நிலம்பூர் சாலை விரைவு ரயில் (16326), புனலூர்- குருவாயூர் விரைவு ரயில் (16327) முன்பதில்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.
அதேபோல் திருச்சி சந்திப்பு- பாலக்காடு டவுன் விரைவு ரயில் (16843), பாலக்காடு டவுன்-திருச்சி சந்திப்பு விரைவு ரயில் (16844), நாகர்கோவில்-கோட்டயம் விரைவு ரயில் (16366) என மொத்தம் 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கிறது.
முன்பதிவு பெட்டிகள் தற்போது முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாறுவதால் இதில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் முழு பணத்தையும் திரும்ப பெறலாம். இது தொடர்பாக இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் உள்ளிட்ட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் வருகிற 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள நிலையில் பயணிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.
No comments:
Post a Comment