சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் அசத்தலான பைக் ஓபன் ரோர் பைக் ஆகும். இந்த பைக் ஸ்கூட்டர் டிசைன் போல இல்லாமல் மிகவும் ஸ்டைலான நேக்கட் ஸ்ட்ரீட் பைக் போன்ற டிசைன் கொண்டுள்ளது.இந்த பைக் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை தற்போது நாம் ஏன் வாங்கவேண்டும்? இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பது பற்றிய விவரங்களை இந்த பதிவின் மூலம் காண்போம்.
இந்தியாவில் பல எலக்ட்ரிக் பைக் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளாக மக்கள் அதிக அளவு சுற்று சூழல் மாசு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகம் செய்யவேண்டும் என்பதே ஆகும்.
அப்படி இளைஞர்களை மையப்படுத்தி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பைக் இந்த ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ரோர் பைக் ஆகும். இந்த பைக் பெயரளவில் இல்லாமல் பல முக்கிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
புதிய ரெட்ரோ டிசைன்
Oben Rorr Belt Designஇந்த பைக்கை பார்க்கும்போது நமக்கு ஹோண்டா CB300R வருகிறது. இந்த புதிய ரெட்ரோ டிசைன் பல வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. இந்த பைக்கை அவர்கள் எப்படி காட்சி படுத்தினார்களோ கிட்டத்தட்ட அதே டிசைன் வடிவில் இந்த பி பைக்கை அறிமுகம் செய்தது மிகவும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கில் LED வசதி உட்பட மாடர்ன் வசதிகள் பல இடம்பெற்றிருப்பது பார்க்கப்படுகிறது.
பைக் ரேஞ்சு
இந்த பைக்கின் மொத ரேஞ்சு 200 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இதே ரேஞ்சு நமக்கு கிடைக்காது. இந்த பைக்கை HAVOC மோடில் ஓட்டினால் நமக்கு 100 கிலோமீட்டர் ரேஞ்சு கிடைக்கும்.
CITY மோடில் ஓட்டினால் நமக்கு 120 கிலோமீட்டர் ரேஞ்சு கிடைக்கும். ECO மோடில் ஓட்டுவதன் மூலம் 150 கிலோமீட்டர் ரேஞ்சு கிடைக்கும். இதன் மூலம் இந்த செக்மென்ட்டில் அதிக ரேஞ்சு தரும் பைக்காக இந்த பைக் உள்ளது.
விலை விவரம்
இந்த பைக்கின் விலை இந்திய ரூபாய் மதிப்பில்
1,24,999 ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சலுகைகளுடன் இந்த பைக் 99,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது.
டெல்லியில் 94,999 ரூபாயில், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் 1,04,999 மற்றும் 1,14,999 ரூபாயில் கிடைக்கிறது. இந்த அணைத்து ஷோரூம் விலையே ஆகும்.
நீர் புகாத பேட்டரி மற்றும் மோட்டார்
இந்த பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் நீர் புகாதவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள 4.4 KWH பேட்டரி IP67 வாட்டர் ப்ரூப் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த பைக்கை 1 மீட்டர் ஆழ தண்ணீரில் மூழ்கினாலும் அரை மணிநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டுள்ளது. இதன் 10 KW மோட்டார் 4KW பவர் கொண்டுள்ளது. இதுவும் IP67 வாட்டர் ப்ரூப் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு மற்றும் டெஸ்ட் ரைடிங்
இந்த பைக்கின் முன்பதிவு மார்ச் 18 முதல் தொடங்கிவிட்டது.இதனை முன்பதிவு செய்ய 999 ரூபாய் கட்டணத்தை ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதன் டெஸ்ட் ரைட் வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்று தெரிகிறது. டெலிவரி ஜூலை மாதம் முதல் தொடங்கும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment