நாளை (08.04.22) தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், வெள்ளிக்கிழமைதோறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
அதன்படி, நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
மேற்காணும் கல்வித்தகுதி, விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு, வெண்பாக்கம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment