' நான் முதல்வன் ' திட்டம்....12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகம்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'நான் முதல்வன்' திட்டம் இன்று முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இணையவழி நேரலை அமர்வுகள் நடைபெற உள்ளது. இந்த அமர்வுகளில், உயர்கல்வி, நுழைவுத்தேர்வு, உதவி தொகை, வேலைவாய்ப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இன்று மற்றும் 22ஆம் தேதியிலும், கலை, வணிகம் உட்பட பிற பிரிவு மாணவர்களுக்கு வரும் 19 மற்றும் 23ஆம் தேதிகளிலும் இந்த அமர்வுகள் நடைபெற உள்ளன
No comments:
Post a Comment