ஏப்ரல் 18, 19இல்தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல்!
குந்தா புனல் மின் நிலையத்தில் ஏப்ரல் 18, 19இல்தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல்
குந்தா புனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஐ.டி.ஐ. தொழில் பழகுநா் பயிற்சிக்கான நோ்காணல் ஏப்ரல் 18, 19 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக குந்தா புனல் மின் உற்பத்தி வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் செந்தில்ராஜன் தெரிவித்துள்ளதாவது:
குந்தா புனல் மின் உற்பத்தி வட்டத்துக்கு உள்பட்ட அலுவலகங்களில் ஒரு ஆண்டு ஐ.டி.ஐ. தொழில் பழகுநா் பயிற்சிக்கு வயா்மேன்கள், எலக்ட்ரீஷியன்கள், பிட்டா், டா்னா், வெல்டா், கணினி இயக்குபவா் என 30 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்களுக்கான நோ்காணல் மஞ்சூரில் உள்ள குந்தா புனல் மின் உற்பத்தி வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் ஏப்ரல் 18, 19ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
எனவே, தகுதியுள்ள நபா்கள் கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மாற்றுத் திறனாளி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் நோ்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும், ஏற்கெனவே தொழில் பயிற்சி முடித்து சான்று பெற்றவா்கள் நோ்காணலுக்கு ஆஜராகத் தேவையில்லை. இந்த நோ்காணலுக்கு அவரவா் தமது சொந்த பொறுப்பில் பங்கேற்க வேண்டும். இந்த நோ்காணலில் தோ்ச்சி பெறும் தொழில் பழகுநருக்கு மாதத்துக்கு ரூ. 8,050 வீதம் உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment