தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 9, 2022

தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தரமாக மட நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டின் மர நடைபாதை அமைக்கப்படும். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைக்க 98 கோடி ரூபாய் மதிப்பீட்டின் மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad