நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் முறையீடு செய்ய ஏப்.20 வரை அவகாசம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 8, 2022

நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் முறையீடு செய்ய ஏப்.20 வரை அவகாசம்

நகைக்கடன் தள்ளுபடி பெறாதவர்கள் முறையீடு செய்ய ஏப்.20 வரை அவகாசம்
தேனி மாவட்டத்தில் நகைக்கடன் பெற்றவர்களில் 52,784 பேருக்கு தகுதியில்லை என கூறி அரசு கடன் தள்ளுபடி அளிக்கவில்லை.

27,977 பேருக்கு நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடன் தள்ளுபடி பெறாதவர்கள் தகுதி இருப்பின் ஏப். 20 வரை மேல்முறையீடு செய்யலாம் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.தேனி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், வேளாண் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் 80,089 பேர் நகைக்கடன் பெற்றுள்ளனர்.

இவர்களில் அரசு அறிவித்த கட்டுப்பாடு, விதிமுறைகளின் படி தணிக்கை செய்து தகுதிவாய்ந்த 30,283 பேர் கொண்ட பட்டியலை மாவட்ட கூட்டுறவுத்துறையால் அரசுக்கு அனுப்பபட்டது. இதில் 40 கிராமுக்கு அதிகமாக நகை அடகு வைத்தவர்கள், கடன் தொகைசேமிப்பு, நிரந்தர வைப்புத் தொகையில் செலுத்தியவர்கள் என 2306 பேருக்கு தகுதியில்லை என அரசு நிராகரித்தது.

இறுதியாக தேனி மாவட்டத்தில் 27,977 பேருக்கு ரூ.107.41 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்து அரசு அறிவித்தது. அவர்களில் 27,305 பேருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ், நகை வழங்கப்பட்டுவிட்டது.

வெளியூரில் இருப்பவர்கள், வாரிசு சான்று இல்லாதவர்கள், நகையை திருப்பியவர்கள் என 672 பேர் சான்றிதழ், நகையை திரும்ப பெறவில்லை.
மேல்முறையீட்டு குழு:

நகைகடன் தள்ளுபடி குறித்து மேல்முறையீடு செய்ய பெரியகுளம், உத்தமபாளையம் சரகத்தில் துணைபதிவாளர் தலைமையிலான மேல்முறையீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர், மத்திய வங்கி பொதுமேலாளர் தலைமையிலான குழு உள்ளது. நகைகடன் தள்ளுபடி பெறாதவர்கள் தகுதி இருப்பின் ஏப்.20 வரை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் முறையீடு செய்யலாம். மேல்முறையீடு மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad