முதலமைச்சரிடம் புகார் அளிப்பதற்கான CM Cell; உங்கள் புகாரை பதிவு செய்வது எப்படி?
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் முதலமைச்சருக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஆங்கிலத்தில் Chief Minister Special cell Tamilnadu என்று பெயர். இது மக்களின் கோரிக்கைகள் நேரடியாக முதலமைச்சரை சென்றடைவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இது முதலமைச்சரின் நேரடி பார்வையில் இருப்பதால் உங்களுடைய கோரிக்கை நியாயமானதாக இருப்பின் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மனுவை cmcell.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர் தனிப்பிரிவு மனு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
“இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கை தகுதியுடையதாக இருப்பின் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது அரசு”
Step 1:
முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் முதலமைச்சரின் தனிப்பிரிவு தமிழ்நாடு (Chief Minister Special cell Tamilnadu) என்று திரையில் தோன்றும். அவற்றில் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் இருக்கும். அதில் தங்களுக்கு எது ஏற்றதோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Step 2:
பின் அவற்றில் தமிழை தேர்வு தேர்வு “முதலமைச்சரின் தனிப்பிரிவு” என்பதை click செய்யுங்கள் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்தால் “About Cm Cell” என்பதை Click செய்யுங்கள்.
Step 3:
பின் அவற்றில் மேலே உள்ள “புதிய பயனாளர் பதிவு” (New User Registration) என்பதை Click செய்யுங்கள்.
Step 4:
பின் அவற்றில் தங்களது சரியான விவரங்களை உள்ளிடவும். தங்களது அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு “சேமி” (submit) என்று திரையில் தோன்றும். அதை click செய்ததும் உங்களுக்கான லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு திரையில் தோன்றும். தங்களது password-ஐ நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
Step 5:
பிறகு அந்த படிவத்தின் மேலே இருக்கும் உள் நுழைக (Login) என்பதை Click செய்யவும். பிறகு தங்களது லாக் இன் ஐடி மற்றும் Password உள்ளிடவும். பாதுகாப்பான குறியிடு (Secure Code) என்ற இடத்தில் அருகில் இருக்கும் எண்களை உள்ளிடவும். இதன் பிறகு கீழே இருக்கும் உள் நுழைக (login) என்பதை click செய்யவும்.
Step 6:
பின் கோரிக்கை வகை என்ற option-ஐ click செய்தால் ஒரு பட்டியல் தோன்றும். அவற்றில் தாங்கள் எந்த கோரிக்கையை அளிக்க விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
உங்களது புகாரை உள்ளிட்டவுடன் சமர்ப்பி (Submit) என்ற option-ஐ click செய்தவுடன் உங்கள் புகார் சமர்ப்பிக்கபட்டுவிடும் மற்றும் உங்களுக்கான கோரிக்கை எண் கொடுக்கப்படும் அதனை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
தங்களது புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு கோரிக்கை எண் பயன்படும்.
No comments:
Post a Comment