அட கடவுளே... ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; தருமபுரியில் சோகம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 2, 2022

அட கடவுளே... ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; தருமபுரியில் சோகம்

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் - பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் அரசகுமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும் கணவரும் வந்தனர். நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர் வேலை விஷயமாக ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மகேஸ்வரியின் அறை கதவை தட்டி கூப்பிட்டுள்ளார். கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது மகேஸ்வரி துப்பட்டாவால் பேன் கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் தருமபுரி சப் கலெக்டர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரனை நடத்தி வருகிறார். திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பென் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad