பரங்கிமலை அருகே கானா பாடகர் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து தகவல் சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்.
பரங்கிமலை அடுத்த ஆலந்தூர் சிக்னல் ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் உயிரிழப்பு பஸ் டிரைவருக்கு அடி உதை. தகவல் சேகரிக்க சென்ற பதிக்கையாளர்களுக்கும் உதை
சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர் சுடரொளி (21). இவர் அப்பகுதியில் கானா பாடல்களை பாடி பிரபலமாகியுள்ளார். பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரங்கல் கூட்டத்திலும் பாடல்களை பாடி வந்துள்ளார். யூ டியூபிலும் பாடல்களை வெளியிட்டு சில பாடல்கள் பிரபலமாகியுள்ளன. இந்நிலையில், கானா பாடகரான சுடரொளி ஏப்ரல் 1ம் தேதி இரவு நந்தம்பாக்கத்தில் கானா பாடல்களை பாடி விட்டு மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வந்துள்ளார்.
பைக் பரங்கிமலை அடுத்த ஆலந்தூர் சிக்னல் அருகே வந்தபோது விபத்தாகி ஆம்னி பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சுடரொளி பலியாகியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்தில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற மாலை முரசு தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஓட்டுநர் ஆகியோரை சுடரொளியின் நண்பர்கள் கடுமையாக தாக்கி விட்டு தப்பியுள்ளனர்.
டிஆர்பி-க்காக வந்தீர்களா என்று கூறி மூவரையும் அவர்கள் அடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். விபத்து குறித்து தகவல் சேகரிக்க சென்ற இடத்தில் பலியானவரின் நண்பர்கள் சேர்ந்து பத்திரிகையாளர்களை அத்துமீறி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment