ராயபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்த தாய்மாமன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை
சென்னை ராயபுரத்தில் 9 வயது சிறுமி பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்த சம்பவத்தின் கைது நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை தந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு, சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வசித்த 9 வயது சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால், சிறுமி அவரது தாயாரின் சகோதரன் தேசப்பன் (தாய் மாமன்) என்பவர் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் மாமனான தேசப்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பின்னர் சிறுமி பூப்படைந்த பின்னரும் தேசப்பன், சிறுமியிடம் தகாத உறவு கொண்டும், பின்னர் அவரது நண்பர்களை சிறுமியிடம் பாலியல் உறவு கொள்ள வைத்தும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி தெரிந்தும், சிறுமியின் தாய் மற்றும் தேசப்பனின் மனைவி (அத்தை) ஆகியோர் சிறுமியை காப்பாற்றாமல் தேசப்பனுக்கு துணையாக செயல்பட்டுள்ளனர். அதன் பின்னர் சிறுமியை ஒரு சிறுமிகள் காப்பகத்தில் தங்க வைத்தும், சிறுமிக்கு நடந்த கொடுமைகள் குறித்து அறிந்தும் அந்த இல்லத்தின் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு துணையாக செயல்பட்டுள்ளனர்.
இது குறித்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ராயபுரம் AWPS ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகாரில் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின்பேரில், போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பேரில், சிறுமியின் தாய்மாமன் தேசப்பன், சிறுமியின் தாயார் ரேவதி, சிறுமியின் அத்தை சாந்தி, இல்லத்தின் நிர்வாகி இசபெல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment