டெஸ்லா நிறுவனத்தின் CEO வான எலான் மஸ்க் டோஜ் காயின் மூலம் ஒரு புதிய நெட்வொர்க்கை உருவாக்க தீவிரமாக யோசித்து வருவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் (SpaceX) நிறுவனரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் 79 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். எப்பொழுதும் பரபரப்பாகவும் அவரின் நிறுவனங்கள் மற்றும் அவரின் கருத்துகள் குறித்தும் தினமும் ட்விட் செய்து வருவதை வாடிக்கையாகி வைத்திருப்பார்
இதற்கிடையில் மார்ச் மாத இறுதியில் "ஜனநாயகத்திற்கு பேச்சு சுதந்திரம் அவசியம்" என்ற கொள்கையை ட்விட்டர் "கடுமையாக பின்பற்றுகிறது" என்று நம்புகிறதா என்ற தலைப்பில் தன் ஃபலோயர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டார் அதற்கு 70% இல்லை என்றே பதில்கள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து டோஜ் காயின் மூலம் ஒரு புதிய வலைத்தளத்தை உருவாக்குவது குறித்து எலான் மஸ்க் தீவிரமாக யோசித்து வருவதாகவும் ட்விட் செய்துள்ளார்.
இந்த கருத்துக் கணிப்பை தொடர்ந்து இதற்கு என்ன செய்யலாம் என அவரின் ஃபாலோயர்களிடம் கேட்டதற்கு அதில் ஒருவர் இந்த ஐடியாவை கொடுத்துள்ளார்.
அதன்பின் எலான் மஸ்க் விரைவில் முழு பேச்சு சுதந்திரத்துடன் கூடிய ஒரு வலைத்தளத்தை டோஜ்காயின் மூலம் உருவாக்கலாம் என கூறியுள்ளார். எந்தவொரு புதிய பிளாட்ஃபார்மிலும் டிஜிட்டல் டிப் ஜார் இருக்கும், அவற்றை கிரிப்டோகரன்சியான டோஜ்காயின் மூலம் ஆதரிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment