ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். பி.எட்., படிக்கும் மாணவர்கள், 'போனபைடு' என்ற உறுதி சான்றிதழ் பயன்படுத்தி விண்ணப்பிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பி.எட்., முடித்த பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தகுதி பெற, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை மார்ச் 7ல், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்தது.
பி.எட்., மாணவர்களுக்கு சலுகை
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மார்ச் 14ல் துவங்கியது. ஒரு மாதம் கழிந்த நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பி.எட்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
'போனபைடு' உறுதி சான்றிதழ்
பி.எட்., படிப்பில் இறுதியாண்டு தேர்வு எழுதியுள்ளவர்கள், தங்கள் கல்லுாரிகளில், 'போனபைடு' என்ற உறுதி சான்றிதழ் பெற்று, அதை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் சலுகை அளித்துள்ளது. அதேபோல, டி.எல்.எட்., என்ற தொடக்க கல்வி டிப்ளமா இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், போனபைடு சான்றிதழை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment