மாணவிகளின் பெயர்களை பச்சை குத்திய மாணவர்கள்: கண்டித்த ஆசிரியர்களுக்கு மிரட்டல்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் தெரணி கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் இந்திராணி(52). இவர் நேற்று பாடாலூர் போலீசில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர், 8ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவிகளின் பெயர்களை கைகளில் பச்சை குத்தி கொண்டுள்ளனர். இவர்களின் செயல்களை கண்டித்ததால் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி மிரட்டி வருகின்றனர்.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டிருப்பதோடு, கண்டித்த ஆசிரியர்களை மிரட்டி தரக்குறைவாக பேசிவருவதால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் பள்ளியில் மட்டுமன்றி சுற்றுவட்டார ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment