தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 13, 2022

தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும்

தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும்
 
Tamil Nadu Agricultural University Employment - No Exam, Only Interview
தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிக்கு வருகின்ற மே 23ல் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கோவையில் செயல்பட்டுவருகிறது. இங்கு விவசாயம் தொடர்பான அனைத்துப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை மாணவர்கள் படித்துவருகின்றனர். இதோடு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது காலியாக Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

வேளாண் பல்கலைக்கழகப் பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் - 10

தகுதி - இளங்கலைப்பட்டம் முடித்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு முன் அனுபவம் இல்லாதவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிகவிண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தகுதியுள்ள நபர்கள் வருகின்ற மே 23 ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்றுக்கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

The Director (Extension Education), TNAU, CBE.

நேர்காணலில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் - மாதந்தோறும் ரூபாய் 20 ஆயிரம் என நிர்ணயம். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://tnau.ac.in/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.
NOTIFICATION: CLICK HERE

No comments:

Post a Comment

Post Top Ad