12ம் வகுப்பு முடித்தவா்கள் ட்ரோன் இயக்குவதற்குப் பயிற்சி பெறலாம் - மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்
Grade 12 graduates can train to operate a drone - get a job with a salary of Rs. 30,000 per month
12ம் வகுப்பு முடித்தவா்கள் ட்ரோன் இயக்குவதற்குப் பயிற்சி பெறலாம் - மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம்
12ம் வகுப்பு முடித்தவா்கள் ட்ரோன் இயக்குவதற்குப் பயிற்சி பெறலாம் என்றும் இதன் மூலம் மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரோன் சேவைக்கான உள்நாட்டுத் தேவையை ஊக்குவிக்க 12 மத்திய அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாக கூறிய அவா், வரும் ஆண்டுகளில் நமக்கு சுமார் 1 லட்சம் ட்ரோன் இயக்குபவா்கள் தேவை என்றும் தெரிவித்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:
மூன்று விதத்தில் ட்ரோன் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதலாவதாக, கொள்கை சார்ந்தது. இரண்டாவது, ஊக்கத்தை உருவாக்குவதாகும்.
பிரதமா் மோடி தலைமையின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பிஎல்ஐ (உற்பத்திசார்ந்த ஊக்கத்தொகை) திட்டம், ட்ரோன் பிரிவில் உற்பத்திக்கும் சேவைக்கும் உத்வேகம் அளிக்கிறது.
மூன்றாவது, உள்நாட்டில் தேவைகளை உருவாக்குவதாகும். இதற்காக 12 மத்திய அமைச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்றைக்கு 12ம் வகுப்பு முடித்தவா்கள் ட்ரோன் இயக்க பயிற்சி பெறலாம். இதற்கு பட்டப்படிப்புதான் தேவை என்பதல்ல. இரண்டு அல்லது மூன்று மாத பயிற்சிக்குப் பின்னா், மாதம் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெறலாம். வரும் ஆண்டுகளில் நமக்கு சுமார் 1 லட்சம் ட்ரோன் இயக்குபவா்கள் தேவை. ஆகையால், இதில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்திய ட்ரோன் துறை வரும் 2026-க்குள் ரூ.15,000 கோடி விற்று முதலை எட்டும் என அவா் ஏற்கெனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் கூறியிருந்தார்.
No comments:
Post a Comment