விருதுநகரில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 5, 2022

விருதுநகரில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்

விருதுநகரில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

கால்நடை பராமரிப்புத்துறையில் ஓமிக்ரான் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் மீள வரும் 28ஆம் தேதி முற்பகல் முதல் மே 9ஆம் தேதி 9 நாட்களுக்கு (அரசு விடுமுறை நாட்கள் தவிர மே 1, மே 3, மே 8) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, 2 மணி முதல் காலை வரை 5.30 மணி அளவில் விருதுநகர் மருத்துவக் கல்லூரி எதிர்புறம் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
 
மேலும், நேர்முக அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியல் விருதுநகர் மாவட்ட வலைத்தளமான https://virudhunagar.nic.in/ ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகம் தகுந்த ஆதாரங்களுடன் அலுவலக நேரில் சென்று அணுகலாம். புதிய நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad