ரேஷன் கார்டு தொலைத்து விட்டதா? மீட்டு எடுப்பது எப்படி?:
ரேஷன் கார்டு தொலைத்து விட்டதா? மீட்டு எடுப்பது எப்படி?: Apply @ tnpds.gov.in
தமிழகத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு", என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். இத்திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் தற்போது ரேஷன் கார்டில் பல்வேறு விதிமுறைகளை அரசு அமல்படுத்தி வருகிறது. ஏனெனில் ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று அரசு பல்வேறு வகையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இப்போது நீங்கள் எதிர்பாராத விதமாக தங்களின் ரேஷன் கார்டை தொலைத்து விட்டால் கவலை கொள்ள வேண்டாம். இதனை சுலபமாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து திரும்ப பெற்று கொள்ளலாம்.
ரேஷன் கார்டை திரும்ப பெறும் எளிய வழிமுறைகள்:
முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இதன் உள்ளே சென்றதும் பயனாளர் IDஐ பதிவிட வேண்டும்.
இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இதனை உள்ளிட்டு உங்கள் கணக்கிற்குள் உள் நுழைய வேண்டும்.
இதையடுத்து TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் திறக்கப்படும்.
இப்போது கேட்கப்படும் விவரங்களை நிரப்பிய பிறகு அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த PDF பைலை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து அருகில் உள்ள உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதியாக தங்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
No comments:
Post a Comment