கண்களை இமைக்க விடாமல்
பதைபதைப்புடன் படிக்கவைக்க போகும்
மொழிமாற்ற வண்ணப் படக்கதை
*கௌபாய் ஸ்பெஷல்*
*ரெவரண்ட்*
*துப்பாக்கி குண்டுகளின் முழக்கத்தில் ...*
துடிப்பாக செல்லும் மொழிமாற்ற காமிக்ஸ்
இந்த புத்தாண்டு தினத்தில் செழுமையான செல்வவரவுகளும் பூரணமான மனநிறைவுகளும் அத்துடன் இதுபோன்ற அரிதான அதிரடி கதைகளும் வருடம் முழுவதும் தொடர்ந்து கிடைக்க காமிக்ஸ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்
நோவாடா பாலைவனத்தில் ஒரு அசம்பாவிதம்... பணத்தை கொள்ளையடிக்க வந்த நான்கு கயவர்கள் தன் தாயையும் மானபங்கப் படுத்த முயற்சிக்க கையில் துப்பாக்கி ஏந்துகிறான் மிகச் சிறுவன் ஆங்கஸ்... அதன்பின் நடந்ததுவோ ....?
அந்த கருப்பு நாட்களுக்குப்பின் 15 வருடங்கள் கழித்து அங்குள்ள யுரேகா நகருக்கு வருகிறார் ரெவரெண்ட் ஒயிட் கிராஸ்.. ஆலயத்தின் வழியாக ஜோன்ஸ் என்ற பணக்காரனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு டெபோரா என்ற பெண்ணின் தலைமையில் வரும் நடனப் பெண்களை கண்டு நகருக்குள் செல்கிறார் .. டெர்ரான்ஸ் என்பவரின் கடைக்கு சவரம் செய்ய ரெவரண்ட் சென்ற சில மணி நேரங்களில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். சந்தேகத்தின் பெயரில் ரெவரண்ட் லாக்கப்பில் அடைக்கப்பட அப்பொழுது தான் தெரிகிறது அவன் ஒரு பாதிரியாரே அல்ல .. அத்தோடு தன் பன்னிரண்டாவது வயதிலேயே லிட்டில் பாப் என்ற கொடூரமான மனிதனைக் கொன்ற பிரபலமான வெகுமதி வேட்டையன் அவன்தான் . அவன் நிஜப் பெயர் ..... ஆங்கஸ் . அவன் நிஜத் தொழில்.... கொடூரமான கொள்ளையர்களை கொன்று ஒழிப்பது..
ஆனால் ஆங்கஸ் லாக்கப்பில் இருக்கும் போதே ஜோன்ஸின் வலது கையான பிளான்டி கொல்லப் படுகிறான். இது ஆல்வாரஸ் என்ற கொலைகாரனின் வேலையாக இருக்குமோ என்று அவனை வேட்டையாட ஆங்கஸ் விடுவிக்கப் படுகிறான். அப்பொழுது மீண்டும் ஒரு திருப்பமாக இதுவரை நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பது வெளிப்படுகிறது . அதன் அடுத்த கட்டமாக இரண்டு தலைகள் வேட்டையாடப்பட பாக்கி இருக்கின்றன.. மிகுந்த பாதுகாப்புடன் அரசியல் செல்வாக்குடன் வெறியர்களாக இருக்கும் அவர்களைக் கொல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.. அதன்பின் அந்த மனித வேட்டைகளுக்கு வகுக்கப்படும் வியூகங்களும் அதை முறியடிக்க செய்யப்படும் முயற்சிகளும் துப்பாக்கி குண்டுகள் பறக்கும் சாகசங்களும் யாருமே எதிர்பாராத திருப்பங்களுமாக இதுவரை நாம் கண்டிராத அளவு விறுவிறுப்புடன் அனல் பறக்க செல்லும் இந்த மொழிமாற்ற காமிக்ஸ் இந்த புத்தாண்டு தினத்தின் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்க பிடிஎஃப் ஆக பதிவிடப்படுகிறது.
கண்களை இமைக்க விடாமல்
பதைபதைப்புடன் படிக்கவைக்க போகும்
மொழிமாற்ற வண்ணப் படக்கதை
*கௌபாய் ஸ்பெஷல்*
*ரெவரண்ட்*
*துப்பாக்கி குண்டுகளின் முழக்கத்தில் ..*
துடிப்பாக செல்லும் மொழிமாற்ற காமிக்ஸ்
No comments:
Post a Comment