*சுஜாதாவின்*
1 . *காதல் பூச்சி*
2 . *கொல்லாமலே* ..
3 . *இளநீர்*
*முத்தான மூன்று சிறுகதைகள்*
தங்கக் கோப்பைகளில் மட்டுமே
தளுதளுத்துக் கொண்டிருந்த
தமிழ்த் தேனை
பாமரத் தமிழாக
மண் குடுவைகளில் விநியோகித்தவர்
.ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்து வந்த
அறிவியல் பெண்ணை
அத்திப்பட்டி
அரசமரத்தடிக்கு
அறிமுகம் செய்தவர்!
இலக்கியம் என்றால்
புரியாமல் எழுதுவது அல்ல என்று புரிய வைத்தவர்!
ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் -இல் இருந்து
அகநானூறுக்குத் தாவுவார்!
சினிமாவைப் பேசி விட்டு அடுத்த நொடி
சீத்தலை சாத்தனார் என்பார்!
வீனஸை அலசுவார் !
வெண்பாவையும் விவரிப்பார் !
இசை பற்றி எழுதுவார் !
விசை பற்றியும் எழுதுவார் !
கொலையை விவரிப்பார் !
கலையையும் விவரிப்பார்!
நானோ டெக்னாலஜியும் அத்துப்படி
நாலாயிரப் பிரபந்தமும் அத்துப்படி
தமிழ் எழுத்து
வளைந்து கொடுக்கும்- அவர்
ஆணைப்படி!
இனியொரு சுஜாதா
உஹ்ம்ம்
சாத்தியம் இல்லை..
அவர் பகல்
மற்றதெல்லாம் பகலின் நகல்!!!!
இன்றும் இவர்
இருந்திருந்தால்
இப்பொழுதும்
இளைஞர்கள்
புத்தகப் பிரியர்களாய்
சுற்றித் திரிந்திருப்பார்களோ ?
நினைவு நாள இன்று் அவருக்கு
இன்றைய நினைவெல்லாம் அவர்தானே எங்களுக்கு
அதற்காகவே இந்த சிறப்பு சிறுகதை பதிவு . வசீகரிக்கும் அவரது வார்த்தைஜாலங்களை வண்ணப் படங்களுடன் வந்த சிறுகதைகளாக வாசித்து மகிழுங்கள்.
No comments:
Post a Comment