பிடிஎஃப் சுருக்க உரை:-
ஆங்கில நாடகாசிரியர். ஷேக்ஸ்பியரைத் துவிதப் பிரம்மா என்பார்கள் உலகத்தின் சிருஷ்டி தத்துவத்தைப் புரிந்து கொண்டவர் போல் தமது பாத்திரங்களை நடமாட விடுவார். அவர் உலகில் பேய்களும் உண்டு சாணக்கியர்கள், வீரர்கள், கொலைகாரர்கள், முட்டாள்கள், தேவதைகள் வெறியர்கள் யாவரும் உண்டு. அவர் உலகத்தில், முடிவில் அறத்துக்கே வெற்றி
ஷேக்ஸ்பியர் 1564-ல் வார்விஷயரில் உள்ள ஸ்டாபோர்ட் - ஆன் - அவாள் (அவான் நதிக்கரையில் உள்ள ஸ்டாபோர்ட்) என்ற ஊரில் செயலுள்ள குடும்பத்தில் பிறந்தார் 1616 ஆம் வருஷம் அந்த ஸ்டோ போர்ட் ஆன் அவாளிலேயே செயல் உள்ள பிரபலஸ்தராக உயிர் துறந்தார். சிறுபோதில் அவரது குடும்பம் நொடிந்து விட்டது. அவர் மணவினை சொத்தைக் கொண்டு வந்தாலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. அத்துமீறி ஒரு காட்டில் மான் வேட்டையாடியதாலோ மற்றெந்தக் காரணத்தினாலோ வாரைவிட்டு வெளியேறும்படி நேர்ந்தது
முதலில் பழைய நாடகங்களைத் திருத்திக் கொடுப்பலனாகவும், நடிகனாகவும், நாடகாசிரியனாகவும், பிறகு நாடக இலக்கியத்தின் சாம்ராட்டாகவும் பேரும் புகழும் பணமும் சம்பாதித்தார் பிறகு அந்திம காலத்தைச் சுகவாசியாகக் கழிக்க, பிறந்தவூர் திரும்பினார்.
லண்டனில்
கைப்பழக்கம் முதிர்ந்து உலகின் ஆழ்ந்த புதிர்களை எடுத்து நாடகங்களாக அமைத்த காலத்தில் பிறந்த நாடகங்கள் கீழே தந்திருக்கும் மூன்றும். 'டெம்பஸ்ட்' என்ற நாடகத்தில் அவர் பிராஸ்ரோவாக வந்து உலக நாடகமேடையில் பிரியா விடை பெற்றுக் கொள்ளுகிறார் என்று சொல்லுவார்கள்.
.*டைமன் கண்ட உண்மை Timon of Athens*
டைமன், குபேர சம்பத்துடையவன். கிரேக்க நாகரிகத்தின் நாற்றங்கால் என்று சொல்லவேண்டிய ஏதென்ஸ் நகரத்தின் பிரதான பிரஜை. உலகத்தின் சௌபாக்கியங்கள் யாவும் அவன் காலடியில் கிடந்தன. பணம் இருந்தால் மட்டும் போதுமா? மாரிபோல இரு கைகளாலும் வாரி வழங்கும் மனமும் இருந்தது
அவன் மாளிகையிலே நண்பர்களுக்கு ஓயாத விருந்து எடுத்த வார்த்தைக்கெல்லாம் பரிசு. அவனுடைய வாழ்க்கையே பெருங் களியாட்டமாக இருந்தது
ஏதென்ஸ் நகரத்தின் குடியாட்சியில் அவனுக்கு சொல் சக்தி உந்து: ஏனென்றால் நகரத்துச் சேனையில் தலைமை வகித்துப் போர் புரிந்து பவித்திரமான வடுக்கள் பெற்றவன்.
டைமனை ஏதென்ஸ் நகரின் அதிர்ஷ்ட தேவதை என்றே சொல்ல வேண்டும். அவன் வீட்டில் "ஐயோ" என்று வருகிறவன் மனம் ஓடிந்து திரும்பமாட்டான். பாட்டுக்கட்டி வரும் கவிராயரும், பலநிறப் படம் தீட்டி வரும் ஒவியக்காரரும் பட்டினியோடு திரும்பியதில்லை நகை வியாபாரிகளுக்கு அவன் முற்றத்தில் கொள்ளை லாபம்
அவ்வூரில் மூன்று பேரைத் தன் உயிருக்குயிரான நண்பர்களாக மதித்திருந்தான். அவன் விட்டுக்கு அவர்கள் விருந்தாடி வந்து பரிசில் பெற்றுப் போகாத நாள் கிடையது. ஆனால், அவர்கள் அவனைப் பணம் காய்ச்சி மரம் என்று நினைத்திருந்தார்கள். அவன் புன்சிரிப்பின் தண்மையிலே தளிர்த்தார்கள்.
புதுமையான தகவல்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் தவற விடக் கூடாத நூல்!
றார்.
No comments:
Post a Comment