10% மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 28, 2021

10% மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு...

10% மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட மாவட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு...


குறிப்பிட்ட எல்லைக்குள் 10 சதவீதத்திற்கு மேல் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அப்பகுதி அல்லது மாவட்டத்தை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று, மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் கொரோனா பரவல் தீவிரம் குறையவில்லை. தடுப்பூசி போடுதல், பரிசோதனைகளை அதிகரித்தல், நோய் பரவலை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தாலும் கூட, மக்களிடையே போதிய கட்டுப்பாடுகள் இல்லாததால் தொற்று பரவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவித்தல் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கடந்த வாரத்தில் 10 சதவீதம் அல்லது அதற்குமேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது ஆக்சிஜன் ஆதரவு அதிகமாக தேவைப்படுவோர் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் அதிகமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் கட்டுப்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும்.கடந்த சில நாட்களாக தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனைத்து வகையிலான கடுமையான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும். தற்போதுள்ள உள்கட்டமைப்பால் தடுப்பு நடவடிக்கைகளை சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே,  மேற்கண்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை அதிகரிக்க வேண்டும். நகரங்கள், நகரங்களின் சில பகுதிகள், மாவட்ட தலைநகரம், நகர்ப்புற பகுதிகள், நகராட்சி வார்டுகள் மற்றும் பஞ்சாயத்து பகுதிகளிலும் கூட கட்டுப்பாட்டு மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் தனிநபர்கள் அல்லது குடும்பங்களை கண்காணிக்க வேண்டும். தொற்று வெளியே பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக தெளிவான எல்லைகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட கட்டுப்பாட்டு மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட பகுதியில் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும். அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, தனி நபர்கள் இரவுநேரத்தில் பயணிப்பதை தடுக்க வேண்டும். அதற்காக இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும். சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசாரம், மத அல்லது திருவிழா தொடர்பான நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.பணிபுரியும் இடத்தில் தடுப்பூசி

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தனது டுவிட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக, இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்கள் (கிரெடாய்) மற்றும் 

தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் (நரெட்கோ) ஆகியவற்றுடன் ஆலோசிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செலவில் அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட வேண்டும். தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களுக்கே நேரில் சென்று, தடுப்பூசிகளை போட ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad