இன்றைய (25-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 25, 2021

இன்றைய (25-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

இன்றைய (25-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஏப்ரல் 25, 2021

நெருக்கமானவர்களுடனான பயணங்களால் நன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : நன்மை உண்டாகும்.பரணி : சுபவிரயங்கள் ஏற்படும்.கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------ரிஷபம்

ஏப்ரல் 25, 2021

இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். மனைகளில் வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.ரோகிணி : மேன்மை உண்டாகும்.மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------மிதுனம்

ஏப்ரல் 25, 2021

நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------கடகம்

ஏப்ரல் 25, 2021

உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். முக்கியமான முடிவுகளில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வலது கண்ணில் ஏற்பட்ட உபாதைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : எண்ணங்கள் தோன்றும்.பூசம் : நிதானம் வேண்டும்.ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------சிம்மம்

ஏப்ரல் 25, 2021

வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.பூரம் : கவனம் வேண்டும்.உத்திரம் : நன்மையான நாள்.

---------------------------------------கன்னி

ஏப்ரல் 25, 2021

சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான தொழிலால் மதிப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்குஅதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------துலாம்

ஏப்ரல் 25, 2021

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மனதில் சுதந்திர உணர்வு மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்குஅதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------விருச்சகம்

ஏப்ரல் 25, 2021

பொருள் வரவால் சேமிப்புகள் உயரும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : சேமிப்புகள் உயரும்.அனுஷம் : சிந்தனைகள் தோன்றும்.கேட்டை : காலதாமதங்கள் அகலும்.

---------------------------------------தனுசு

ஏப்ரல் 25, 2021

திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். தொழில் அலைச்சல்களால் அனுகூலமான லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்குஅதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மூலம் : அனுகூலமான நாள்.பூராடம் : பொறுமை வேண்டும்.உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------மகரம்

ஏப்ரல் 25, 2021

புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் சொத்துக்களால் லாபம் ஏற்படும். பணிகளில் உயர்வு உண்டாகும். இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்குஅதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.திருவோணம் : சாதகமான நாள்.அவிட்டம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

---------------------------------------கும்பம்

ஏப்ரல் 25, 2021

எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். கடன் சார்ந்த சில செயல்பாடுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சுரங்கம் தொடர்பான பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.சதயம் : கவனமாக இருக்கவும்.பூரட்டாதி : பதற்றமான நாள்.

---------------------------------------மீனம்

ஏப்ரல் 25, 2021

எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய நுட்பங்களை பயிலுவதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.உத்திரட்டாதி : சுபச்செலவுகள் ஏற்படும்.ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad