வரும் 30 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய தடுப்பூசி - பள்ளிக் கல்வித்துறை...
பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 30ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம்போட்டுக் கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'இ - மெயில்' வழியே அனுப்பியுள்ளது. இதற்கிடையில், அனைத்து துறை செயலர்களுக்கும், கலெக்டர்களுக்கும் தலைமை செயலர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'அரசு ஊழியர்களில் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் விபரங்களை வரும், 30க்குள் அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment