45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 30, 2021

45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை

45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை

கடலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. 22 ஆயிரம் பேரில் 8 ஆயிரத்து 600 பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, முதலில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தினர். பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது. அதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 லட்சத்து 82 ஆயிரத்து 526 பேரில், 88 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் அரசு ஊழியர்கள் 22 ஆயிரம் பேர் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் இதுவரை 8 ஆயிரத்து 600 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசி பற்றிய அச்சம், தயக்கம் அவர்களிடம் இருக்கிறது.

இதற்கிடையில் 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். எத்தனை பேர் தடுப்பூசி போடவில்லை. 45 வயதுக்குட்பட்ட அரசு ஊழியர்கள் எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர் என்ற விவரத்தை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் அந்த விவரத்தை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர். அதன்படி இந்த புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. மேலும் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கெள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad