அரசு வேலைக்காக காத்திருக்கும் இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எவ்வளவு? - வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, April 30, 2021

அரசு வேலைக்காக காத்திருக்கும் இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எவ்வளவு? - வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு

அரசு வேலைக்காக காத்திருக்கும் இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எவ்வளவு? - வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 63 லட்சத்து 63 ஆயிரம் பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
Teachers-over-45-years-of-age-in-Tamil-Nadu-must-be-vaccinated-against-corona-by-today---Department-of-Education-orders-to-send-report

 
கடந்த பிப்.28-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 63 லட்சத்து 63 ஆயிரத்து 122 பேர் காத்திருக்கின்றனர். அவர்களில் 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 22 லட்சத்து 78 ஆயிரத்து 107 ஆகவும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 10 லட்சத்து 89 ஆயிரத்து 786 ஆகவும் உள்ளது.

 
இடைநிலை ஆசிரியர்கள் ஒருலட்சத்து 65 ஆயிரத்து 983 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 97 ஆயிரத்து 362 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 18 ஆயிரத்து 324 பேரும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிஇ, பிடெக் பட்டதாரிகள் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 556 ஆகவும், எம்இ, எம்டெக் பட்டதாரிகள்2 லட்சத்து 4,411 ஆகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad