பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, April 27, 2021

பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்

பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்

‘கற்பக விருட்சம்’ என்று சொல்லப்படும் பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் கொண்டது. இதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. பனை மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இத்தகைய பனங்கிழங்கை நாம் சாப்பிடுவதினால் ஏற்படும் மருத்துவ குணங்களை பற்றி இப்பதிவில் நாம் படித்தறியலாமா..?


மிகவும் ஒல்லியாக உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடுவதினால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்கலாம். அது மட்டும் இல்லாமல் உடல் சூட்டினை குறைக்கும். எனவே உடல் உஷ்ணத்தினால் உடல் எடை குறையும் அப்படிப்பட்டவர்கள் தினமும் பனங்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.


மலச்சிக்கல் பிரச்சனையால் தினமும் அவதிப்படுபவர்கள் இந்த பனங்கிழங்கை சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும்.

பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் இந்த பனங்கிழங்கை பவுடர் செய்து தேங்காய் பாலுடன் கலந்து சாப்பிடுவதினால் கருப்பை வலுப்பெறும். இதற்கு என்ன காரணம் என்றால் பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்து கொள்ளும்.

பனங்கிழங்கில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து இரத்த சோகை நோயை எளிதில் குணப்படுத்துகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய எந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால் இந்த பனங்கிழங்கில் உள்ள சில வகையான வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளும். எனவே இந்த பனங்கிழங்கை எந்தவித பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

அரைத்த பனங்கிழங்கு மாவை தோசையாகவும் சுட்டு சாப்பிடலாம்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩ 

No comments:

Post a Comment

Post Top Ad