உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் ( என்சிசி ) இணைப்பு யூஜிசி தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 25, 2021

உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் ( என்சிசி ) இணைப்பு யூஜிசி தகவல்

உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் ( என்சிசி ) இணைப்பு யூஜிசி தகவல்உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான விருப்பப் பாடப்பிரிவில் தேசிய மாணவர் படை  ( என்சிசி ) சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களிடம் தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணர்வுகளை வளர்க்கும் விதமாக தேசிய மாணவர் படை ( என்சிசி ) இளம் வயதுகளிலேயே வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ராணுவம், காவல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதே நேரம் விளையாட்டு போல கல்வித்துறை சார் பாடப்பிரிவுகளில் தான் ( என்சிசி ) இடம் பெற்றிருந்தது.  தற்போது பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் ஏற்று ( என்சிசி ) பயிற்சியானது விருப்பப் பாடப்பிரிவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி ) செயலர் ரஜினிஷ் ஜெயின், கோயில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவு தேர்வு முறையில் ( சிபிசிஎஸ் ) தனர்வுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ( என்சிசி ) பயிற்சியை விருப்பப் பாடப்பிரிவில் சேர்க்கவும் அதன் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. 

அதையேற்று உயர்கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சேர்க்கப்படுகிறது. இதை அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனே அமல்படுத்த வேண்டும். இதற்கான வழிமுறைகள், பாடத்திட்டம், மதிப்பெண் வகைப்பாடு, பயிற்சி திட்டங்கள் குறித்த தகவல்களை யுஜிசி இணையதளத்தில் ( www.ugc.ac.in ).  மேலும் கூடுதல் விவரங்களுக்கு என்சிசி மாநில இயக்குநரகங்களை கல்வி நிறுவனங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad