1 முதல் 12ஆம் வகுப்பு வரை; தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

1 முதல் 12ஆம் வகுப்பு வரை; தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

1 முதல் 12ஆம் வகுப்பு வரை; தமிழக மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!


தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் அனைத்தும் கொரோனா விடுமுறையாகவே கடந்து போய்விட்டன. முதல் அலை சற்றே ஓய்ந்த நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கும், அதன்பின்னர் 9 மற்றும் 11ஆம் வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாவது அலை வேலையை காட்ட ஆரம்பித்ததும் பள்ளிக்கல்வித்துறை உஷாரானது.

12ஆம் வகுப்பை தவிர அனைத்து வகுப்புகளும் வீட்டிலிருந்தே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில் 11ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. பின்னர் கோவிட்-19 பாதிப்புகள் உச்சம் தொட ஆரம்பித்ததால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. தீவிர கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் புத்தக அச்சடிப்பு பணிகள் நடந்து வந்தன. இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதுதொடர்பாக பாடநூல் கழக அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு உரிய முறையில் திட்டமிட்டு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை செய்து முடித்துள்ளோம்.

தனியார் பள்ளிகளுக்கான விற்பனை புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க 2.8 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு படிப்படியாக அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு,

பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் பிரித்து அனுப்பப்படும். தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் மண்டல வாரியாக உள்ள குடோன்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad