ஜூன் 16 வரை இனி இப்படித்தான்; தெற்கு ரயில்வே அதிரடி முடிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

ஜூன் 16 வரை இனி இப்படித்தான்; தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

ஜூன் 16 வரை இனி இப்படித்தான்; தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!


நாடு முழுவதும் கோவிட்-19 இரண்டாவது அலையால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்கள் என குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் வெளியில் செல்வதை பெரிதும் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்து கொண்டிருக்கிறது. போதிய பயணிகளின்றி ரயில்கள் இயக்கப்பட்டால் ரயில்வே துறைக்கு பெரும் நஷ்டம் வந்து சேரும். இதனைக் கருத்தில் கொண்டு பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்கள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பட்டியலில் சமீபத்தில் 6 ரயில்கள் சேர்ந்துள்ளன. அதாவது கர்நாடக மாநிலம் மங்களூரு சென்ட்ரலில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரலுக்கு நாள்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் சிறப்பு ரயில் ஜூன் 16 வரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.


இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 15ஆம் தேதி வரையும், திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரயில் ஜூன் 16ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடிக்கு தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் 15ஆம் தேதி வரையும்,

மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரயில் ஜூன் 16ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த ரயில்கள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது ஜூன் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad