இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2000 இப்படித்தான் வழங்கப்படும்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2000 வழங்கும் திட்டத்தை இன்று முதல் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தலா. ரூ 2000 இரண்டு தவணையாக கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, ரேஷன் கடைகளில் தினமும் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். முறையாக டோக்கன் வழங்கப்படுகிறதா? என்பதும் கண்காணிக்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இருக்கும் நபர் யார் வேண்டுமானாகும் நிவாரண தொகையினை பெற்று கொள்ளலாம்.
No comments:
Post a Comment