வியாபாரம் செழிக்க வாஸ்து வழிமுறைகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 10, 2021

வியாபாரம் செழிக்க வாஸ்து வழிமுறைகள்

வியாபாரம் செழிக்க வாஸ்து வழிமுறைகள்



தொழில் செழிக்க வாஸ்து (Vastu Tips In Tamil)..!
கிழக்கு திசை பார்த்த கடைக்கான வாஸ்து :
கிழக்கு கடை வாஸ்து நியதிபடி தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும்.
கல்லா பெட்டி வைக்கும் திசை பணபெட்டி, காசாளரின் இடது பக்கத்தில் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு, வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

தெற்கு திசை பார்த்த கடைக்கான வாஸ்து :
தொழில் செழிக்க வாஸ்து,  வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும்.

கல்லா பெட்டி வைக்கும் திசை அவருடைய வலது புறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

மேற்கு திசை பார்த்த கடைக்கான வாஸ்து :
தொழில் செழிக்க வாஸ்து: நியதி படி, வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும்.

கல்லா பெட்டி வைக்கும் திசை அவரது இடது கைபுறம் பண பெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும். வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, அல்லது வடகிழக்கு மூலையிலோ அமரக் கூடாது.

வடக்கு பார்த்த கடைக்கான வாஸ்து :
தொழில் செழிக்க வாஸ்து நியதி படி, வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும்.

கல்லா பெட்டி வைக்கும் திசை காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும்.

வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.
கடை அமைப்பு  – வாசற்படி:
தொழில் செழிக்க வாஸ்து (vastu tips in tamil)- கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும்.

மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம்.

வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமுள்ள கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.

கடை அமைப்பு  – கதவுகள்:
தொழில் செழிக்க வாஸ்து (vastu tips in tamil)- கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும். கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும்.

தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.

தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது.
மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.

வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.

கடை அமைப்பு  – பூஜை அறை:
தொழில் செழிக்க வாஸ்து (vastu tips in tamil)- கடையின் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தை தொடங்க வேண்டும்…

No comments:

Post a Comment

Post Top Ad