தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார்?
தமிழகத்தின் 16 வது சட்ட பேரவை முதல் கூட்டம் தொடங்க இருக்கும் சூழலில் அதிமுக வில் எதிர் கட்சி தலைவர் யார் என்பதில் தொடர்ந்து இழுபரி நீடித்து வருகிறது. நடந்து முடித்த தேர்தலின் திரு.மு.க ஸ்டாலின் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார்.
அதே சமயம் அதிமுக வில் எதிர் கட்சி தலைவர் யார் என்பதில் தொடர்ந்து பேச்சி வார்த்தை நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் இன்று கூடியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும், ராஜ்யசபா எம்.பி.,களாக உள்ள கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் தற்போது எம்எல்ஏ.,வாக தேர்வாகியுள்ளதால், எந்த பதவியை விட்டுக் கொடுப்பது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment