இன்றைய ராசி பலன்கள் 2021(05.05.2021) | Indraya Rasi Palan 2021 - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

இன்றைய ராசி பலன்கள் 2021(05.05.2021) | Indraya Rasi Palan 2021

 இன்றைய ராசி பலன்கள் 2021(05.05.2021) | Indraya Rasi Palan 2021
இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி பலன் பார்த்து அதற்கு ஏற்றது போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

மேஷம் ராசி பலன் இன்று – Mesham Today Rasi Palan:-
mesham today rasi palanToday Rasi Palan Mesham – அனைத்தையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். அதேபோல் பெற்றோர்கள் தங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தங்களுக்கு பிடித்தவர்களுக்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பீர்கள். தொழிலில் ஊழியர்கள் கடமை உணர்வுடன் பணிபுரிவார்கள். அலுவகலகத்தில் மேலதிகாரிகளிடம் நம்பிக்கையை பெறுவீர்கள்.
நட்சத்திர பலன்கள்:
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி குடும்பத்தினரால் சில பிரச்சனைகள் உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்களுடன் வீண் விவாதம் செய்வதை முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று எந்த ஒரு புதிய முயற்சிகளையும் செயல்படுத்த வேண்டாம்.

ரிஷபம் ராசி பலன் இன்று – Rishaba Rasi Palangal:-
rishaba rasi palangalToday Rasi Palan Rishabam 2021 – பிறரிடம் சொன்ன சொல்லை இன்று நிறைவேற்றுவீர்கள். சிலர் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து சில முக்கிய விஷயங்களை ஒப்படைப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். தொழிலில் வேலையாட்கள் தங்களை மதிப்பார்கள். அலுவலகத்தில் புதுமையான வாய்ப்புகள் தங்களை தேடி வரும்.

நட்சத்திர பலன்கள்:
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளினால் தங்களது சேமிப்பு கரையும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி குடும்பத்தினரால் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சல்களை இன்று முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

மிதுனம் ராசி பலன் இன்று – Mithuna Rasi palan today:-
mithuna rasi palanIndraya rasi palan in tamil – சந்திராஷ்டமம் காரணமாக கடந்த இரண்டு நாளாக இருந்து வந்த அலைச்சல்கள் மற்றும் கோபங்கள் அனைத்து நீங்கும். வீட்டில் இனிமையான சூழல் உண்டாகும். தங்களது பழைய பிரச்சனைகளுக்கு புதிய அணுகுமுறையால் நல்ல தீர்வு கண்டு பிடிப்பீர்கள். தொழில் செழிக்கும்.

நட்சத்திர பலன்கள்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்சனைகள் உண்டாகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது அலட்சியமாக இருக்க வேண்டாம்.

கடகம் ராசி பலன் இன்று – Kataka Rasi palan today:
kataka rasi today Today Rasi Palan Kadagam – ராசியில் இன்று சந்திராஷ்டமம் இருப்பதினால் சில வகையான பிரச்சனைகள் மற்றும் அலைச்சல்களை சந்திக்கவேண்டியதாக இருக்கும். வீட்டில் அனைத்து காரியங்களையும் நீங்களே செய்ய வேண்டியதாக இருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிவடையும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் நன்மையில் முடிவடையும்.
சிம்மம் ராசி பலன் இன்று – Simmam Rasi palan today:
simmam rasi palan
Indraya Rasipalan: தங்களின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்வீர்கள். தங்கள் பிள்ளைகளின் பொறுப்புணர்வு இப்பொழுது அதிகரிக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடிவடையும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் அனைத்து வேலையாட்களினால் நல்ல பலன் கிடைக்கும்.

நட்சத்திர பலன்கள்:-
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்பு இருக்குன்றது.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் இன்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை முற்றிலும் தவிர்த்து கொள்வது நல்லது.
கன்னி ராசி பலன் இன்று – Kanni Rasi Palan Today:
kanni rasi palan today

 
Kanni Rasi today rasi palan in tamil – வீட்டில் தங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்த்த விஷயங்களில் நீங்களே வெற்றி பெறுவீர்கள். வெளி இடத்தில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலில் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் தங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

நட்சத்திர பலன்கள்:-
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.


துலாம் ராசி பலன் இன்று – Thulam Rasi Palan Today:
thulam rasi palan todayToday Thulam Rasi Palan  – தங்களது எதிர்காலத்திற்கு இன்று புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் உத்தியோகம் குறித்து அவ்வப்போது சிந்திப்பீர்கள். தங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்வீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை

கிடைக்கும்.

நட்சத்திர பலன்கள்:-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம் ராசி பலன் இன்று – Viruchigam Rasi Palan Today:
viruchigam rasi palan todayIndraya rasi palan: பிறரால் இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் இன்று சரியாகும். தங்கள் தாயாருடன் வீண் விவாதம் வந்து நீங்கும். தொழிலில் பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் பிறர் கூறும் விமர்சனங்களை தாண்டி முன்னேறி செல்வீர்கள்.
நட்சத்திர பலன்கள்:-
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பகைவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நல்ல பலன் கிடைக்கும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.
தனுசு ராசி பலன் இன்று – Dhanusu Rasi Palan:
dhanusu rasi palanToday Rasi Palan 2021 – தங்கள் பேச்சில் அனுபவ திறன் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் தங்கள் மீது அதிக அக்கறையாக இருப்பார்கள். அரசு சார்ந்த காரியங்கள் நன்மையில் முடிவடையும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். தொழிலில் பழைய சரக்குகளை விற்பனை செய்து விடுவீர்கள். அலுவலகத்தில் தங்களது உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். 

நட்சத்திர பலன்கள்:-
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தங்கள் நண்பர்களால் செலவுகள் உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது அமைதியை கடைபிடிக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம் ராசி பலன் இன்று – Magaram Rasi Palan:
magaram rasi palan
Today Rasi Palan 2021 in tamil – கணவன் மனைவிக்குள் சென்ற இரண்டு நாளாக இருந்து வந்த மோதல்கள் நீங்கி இப்பொழுது ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் எந்த ஒரு தடைகளும் இன்றி நன்மையில் நடந்து முடியும். வெளி இடங்களில் மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும். உறவினர்கள் தங்களை புரிந்து கொள்வார்கள். தொழிலில் சில நாளாக இருந்து வந்த போட்டிகள் இன்று குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். 

நட்சத்திர பலன்கள்:-
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நல்ல பலன் உண்டாகும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.
கும்பம் ராசி பலன் இன்று – Kumbam Rasi Palan:
kumbam rasi palan
Today Rasi Palan 2021 in tamil –  ராசியில் சந்திரன் இருப்பதினால் நீங்கள் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க முடியாமல் போகும். தொழிலில் வேலையாட்களுடன் போராட்டங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளினால் அலைச்சல் ஏற்படும்.

நட்சத்திர பலன்கள்:-
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மீனம் ராசி பலன் இன்று – Meenam Rasi Palan Today:
meenam rasi palan todayToday Rasi Palan Meenam 2021 – எதிர்காலத்தை நினைத்து அவ்வப்போது கலவை கொள்வீர்கள். பிள்ளைகள் தங்களது அன்பால் வழிநடத்துவது நல்லது. அரசு சார்ந்த காரியங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். மீனம் ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது உடல் சோர்வு வந்து நீங்கும். தொழிலில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

நட்சத்திர பலன்கள்:-
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மற்றவர்களிடம் கடன் வாங்க நேரிடும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பிரச்சனைகள் உண்டாகும்

No comments:

Post a Comment

Post Top Ad