திமுக அமைச்சரவையில் யாருக்கு இடம்? வெளியான புதிய தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

திமுக அமைச்சரவையில் யாருக்கு இடம்? வெளியான புதிய தகவல்!

திமுக அமைச்சரவையில் யாருக்கு இடம்? வெளியான புதிய தகவல்!


சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது. முதல்வராக பதவியேற்கவில்லையே தவிர கொரோனா தடுப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்டாலினைச் சந்தித்தே ஆலோசித்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் போடும் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும், அவரது அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், சபாநாயகர், துணை சபாநாயகர் யார் யார், என பல கேள்விகள் அறிவாலயத்தை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுழன்றடிக்கிறது. இன்று உரிமை கோருகிறார் என்பதால் நேற்று கிளம்பிய கேள்விகள் அல்ல இவை, கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்த உடனேயே இந்த கேள்விகள் வேகமாக பரவத் தொடங்கின.

அப்போதே உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. அதேபோல் சபாநாயகர் பதவி துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதேபோல் தேர்தல் முடிவுக்குப் பிறகு ஸ்டாலின் தனது பட்டியலில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

துணை சபாநாயகர் பதவியை இந்த முறை தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. எனவே திமுக எம்எல்ஏக்களில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே யாருக்கு அந்தப் பதவி என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தற்போது திமுக உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்றும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

நிதியமைச்சர் – துரைமுருகன், பொதுப்பணிதுறை – கே.என்.நேரு, பள்ளிக்கல்வி துறை – பொன்முடி, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை – ஐ.பெரியசாமி, நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை – எ.வ.வேலு, தொழில் துறையமைச்சர் – பிடிவி.தியாகராஜன், திட்டங்கள் செயலாக்கத்துறை – மா.சுப்ரமணியன், பொதுபோக்குவரத்துத்துறை – அன்பில் மகேஷ், உள்ளாட்சித்துறை – செந்தில் பாலாஜி, கூட்டுறவுத்துறை - கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்,

No comments:

Post a Comment

Post Top Ad