பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா? மத்திய அரசின் முடிவு இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா? மத்திய அரசின் முடிவு இதுதான்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா? மத்திய அரசின் முடிவு இதுதான்!'




நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் ஒன் வகுப்பு வரை தேர்வின்றி ஆல் பாஸ் என்று பல்வேறு மாநிலங்களும் அறிவித்துள்ளன. இதையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வை மட்டும் காலவரையன்றி ஒத்தி வைத்திருக்கின்றன.

கோவிட்-19 பாதிப்புகளின் நிலைமை இன்னும் சீரடையாததால் பிளஸ் 2 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வியுடன் மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாநில கல்வி அமைச்சர்கள் உடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆன்லைன் வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன்பின்னர் பேசிய அமைச்சர்,

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமிருப்பதால் பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஒருசாரார் கூறி வருகின்றனர். ஆனால் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை மாணவர்கள், பெற்றோர்கள்,

ஆசிரியர்களின் உடல்நிலை மிகவும் முக்கியம். அதனால் தேர்வுகளை நடத்துவது குறித்து இரண்டு மாற்று வழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மற்ற பாடங்களுக்கு மதிப்பெண் வழங்குவதாகும். இரண்டு, தேர்வு நேரத்தை குறைத்து விடைகளை தேர்ந்தெடுக்கும் முறையில் தேர்வை நடத்துவதாகும்.

இதுதொடர்பாக மாநில அரசுகள் தங்களது பரிந்துரைகளை வழங்க ஒருநாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பரிந்துரை கிடைத்ததும், உறுதியான கூட்டு முடிவை ஜூன் ஒன்றாம் தேதிக்குள் எடுப்போம் என்று கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad