EB READING CALCULATE பண்ணுவது எப்படி? | TNEB Whatsapp Numbers - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

EB READING CALCULATE பண்ணுவது எப்படி? | TNEB Whatsapp Numbers

EB READING CALCULATE பண்ணுவது எப்படி? | TNEB Whatsapp Numbers


Step: 1

தாங்கள் வீட்டில் உள்ள TNEB digital meter ஒரு புஷ் பட்டன் இருக்கும். அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த புஷ் பட்டனை கிளிக் செய்ததும் முதலில் DATE காட்டப்படும்.

Step: 2

அதன்பிறகு திரும்பவும் அந்த புஷ் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது TIME கட்டப்படும்.

Step: 3

பின்பு திரும்பவும் அந்த புஷ் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது மீட்டர் பாக்சில் நாம் எவ்வளவு பயன்படுத்தியுள்ளோம் என்பதை காட்டும். அதாவது நாம் எவ்வளவு யூனிட் பயன்படுத்தியுள்ளோம் என்று கட்டப்படும்.

Step: 4

மேல் காட்டப்பட்டுள்ள படத்தை இப்பொழுது பாருங்கள் டாட் Left சைடில் ஒன்றில் இருந்து ஒன்பது வரை நம்பர் மாறும், ஒன்பதாவது நம்பர் வந்தபிறகு டாட் Right சைடில் அதாவது 2605.0 KW h என்று மாறும். இது நாம் தினமும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகின்றோம், அதற்கேற்ப மாறிவிடும். இதைத்தான் நாம் பயன்படுத்தும் யூனிட் என்பார்கள்.

இந்த மாதிரி உங்கவீட்டில் எவ்வளவு யூனிட் காட்டுகிறதோ அவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும். இதை வைத்துதான் நாம் எவ்வளவு யூனிட், பயன்படுத்தியுள்ளோம், நமக்கு எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.

அதாவது கடைசியாக உங்கள் மின் அட்டையில் குறித்த Reading-யும், இப்பொழுது குறித்து வைத்துள்ள Reading-யும் கழித்து பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு 2480 கடைசியாக Reading check செய்தது என்று வைத்து கொள்ளலாம். 2604 என்பது தற்போது Reading check என்று வைத்து கொள்வோம். இவற்றை இரண்டியும் கழித்து பார்த்தால் 2604-2480 = 124 என்று வரும். இதுதான் நாம் இதுவரை பயன்படுத்திய யூனிட்.

EB BILL CALCULATE பண்ணுவது எப்படி ?

தமிழக அரசு 100 யூனிட் வரை இலவசமாக அளிக்கின்றது. 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது அல்லவா. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை படித்து தாங்கள் எவ்வளவு யூனிட் பயன்பன்ப்படுத்தியுள்ளீர்கள், அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை யூனிட் கால்குலேட் (Calculate) செய்யுங்கள்.

அதாவது 101 இருந்து 200 யூனிட் பண்படுத்தியவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 1.5 ரூபாய், எனவே 124 யூனிட் என்றால் 100 யூனிட்டை கழித்து கொள்ளுங்கள், பாக்கி 24 யூனிட் இருக்கும் 24 X 1.5 பெருகினால் 36 ரூபாய் செலுத்த வேண்டும்.




No comments:

Post a Comment

Post Top Ad