உதயநிதிக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின் அமைச்சரவையில் 2 பெண்களுக்கு வாய்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

உதயநிதிக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின் அமைச்சரவையில் 2 பெண்களுக்கு வாய்ப்பு!

உதயநிதிக்கு வாய்ப்பில்லை: ஸ்டாலின் அமைச்சரவையில் 2 பெண்களுக்கு வாய்ப்பு!தமிழக முதல்வராக ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கவுள்ளார். முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, எப்படியும் ஆட்சியை பிடிக்கப்போவது நாம்தான் என்ற முடிவோடு அமைச்சரவை பட்டியலை ஏற்கனவே திமுக தயார் செய்து வைத்திருந்தது. முடிவுகளுக்கு பின்னர் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை பொறுத்து சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது அமைச்சர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் பெயர் இடம்பெறவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் தனது தொகுதியையும் தாண்டி திமுகவுக்காக மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தார். அவரது பிரசாரமும் திமுகவின் வெற்றிக்கு ஒரு காரணியாக கூறப்பட்டது.

இதனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், வாரிசு அரசியல் என்ற விமர்சனத்துக்கு ஏற்கனவே திமுக உள்ளாகியிருப்பதால், அதனை தவிர்க்கும் பொருட்டு அவர் உதயநிதிக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று தெரிகிறது. அதேசமயம், கலைஞர் ஆட்சி போன்று இதே அமைச்சர்களே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடர்வார்கள் என்பது கிடையாது. அமைச்சரவையில் அவ்வப்போது மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், ஸ்டாலின் அமைச்சரவையில் பெண்கள் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 12 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில், இருவரது பெயர் மட்டுமே அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடியில் வெற்றி பெற்ற கீதாஜீவன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad