2வது டோஸ் தடுப்பூசி எங்கே? நாள் நெருங்குவதால் பதற்றத்தில் மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

2வது டோஸ் தடுப்பூசி எங்கே? நாள் நெருங்குவதால் பதற்றத்தில் மக்கள்!

2வது டோஸ் தடுப்பூசி எங்கே? நாள் நெருங்குவதால் பதற்றத்தில் மக்கள்!


நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் துணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதில் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஆனது, முதல் டோஸ் போடப்பட்டதில் இருந்து 6 முதல் 8 வாரங்களுக்குள் போடப்பட வேண்டும். இதேபோல் கோவாக்சின் இரண்டாவது டோஸ் 4 முதல் 6 வாரங்களுக்குள் போட வேண்டும். கர்நாடகாவைப் பொறுத்தவரை மே 6ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 1.06 கோடி டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1.01 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு 20 ஆயிரம் டோஸ்கள் வந்து சேர்ந்தன. இவற்றை அனைத்து வார்டுகளுக்கும் சரிசமமாக பிரித்து அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்நிலையில் 2வது டோஸ் போடுவதற்கான கால அளவு நிறைவடையும் சூழல் இருப்பதால் தடுப்பூசியின் முழு பயனை பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட 35.6 லட்சம் பேரில் 24 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் இரண்டாவது டோஸ் கிடைத்துள்ளது.

ஆனால் 45 வயதுக்கு மேற்பட்ட 36.5 லட்சம் பேரில் வெறும் 9 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் தடுப்பூசி தட்டுப்பாட்டால் காத்திருக்கின்றனர். பெங்களூருவில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இதனால் தங்களின் இரண்டாவது டோஸ் எப்போது கிடைக்கும் என பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad