உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை

உடல் நலனுக்கு 6 அடிப்படை யோக முத்திரை
நாம் அறிந்த இந்த பிரபஞ்சம் நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களால் ஆனது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங்கமான நம் உடல் இந்த பஞ்ச பூதங்களால் ஆனவையே. நமது ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களை குறிக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். நமது கட்டை விரல் நெருப்பையும், சுட்டு விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் குறிக்கிறது.

தினமும் நமது விரல்களை பயன்படுத்தி காலையில் 20 நிமிடங்கள் யோக முத்திரை செய்யும்பொழுது உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிகழும். ஒவ்வொரு யோக முத்திரையும் ஒவ்வொரு ஆரோக்கிய பயன்களை அளிக்கின்றது. அந்த வகையில் இந்தப்பதிவில் சில யோக முத்திரைகள் மற்றும் அதன் பயன்களை பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

ஆதி முத்திரை செய்முறை – Adi Mudra Benefits in Tamil:-
இந்த முத்திரையை செய்வதால் நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

செய்முறை:-
விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக வெளி விடவும். ஒரு நிமிடம் இவ்வாறு செய்யவும். இப்போது நமது கட்டை விரலை உள்ளங்கை நோக்கி மடித்து, மற்ற நான்கு விரல்களையும் கட்டை விரலுக்கு மேல் மூடி வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும். இந்நிலையில் இருகைகளிலும் செய்யவும். பத்து நிமிடங்கள் இவ்வாறு செய்யவும்.

ஆதி முத்திரை பலன்கள் – Adi Mudra Benefits in Tamil:-
adi mudra benefits in tamil: உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும். உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

க்யான் முத்திரை செய்முறை (Gyan Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன்கள்:-
தினமும் காலை எழுந்தவுடன் அல்லது நேரம் கிடைக்கும் போது இந்த யோக முத்திரையை செய்து வருவதன் மூலம் அதிகம் கோபம் ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம். இந்த யோக முத்திரை அறிவுவையும் ஒருமுறைப்படுத்தலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை என்று சொல்லலாம்.

விgyan mudra benefits in tamil: ரிப்பில் பத்மாசனம் தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. தங்களுடைய ஆள்காட்டி விரலால் கட்டை விரலை தொட வேண்டும். இந்த நிலையில் அமர்ந்திருந்து 20 நிமிடங்கள் செய்யுங்கள். போகப்போக நேரத்தின் அளவை அதிகரித்தும் கொள்ளலாம்.

Yoga Mudra Asana Benefits in Tamil:-
இந்த முத்திரை உங்கள் அறிவு திறனை மேம்படுத்தும், தூக்கமினையை போக்கும், குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்தும் முத்திரையாகும்.

வாயு முத்திரை செய்முறை (Vayu Mudra Benefits in Tamil) மற்றும் அதன் பயன்கள்:-
வாயு தொல்லையால் அவஸ்த்தைப்படுபவர்கள் இந்த வாயு முத்திரையை தினமும் செய்து வருவதன் மூலம் வாயு தொல்லை நீங்கும்.செய்முறை:-

ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது என்று சொல்லலாம்.

Yoga Mudra Asana Benefits in Tamil:-
மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ஸ்பாண்டிலோஸீஸ் போன்றவற்றினால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்ந்து செய்வதன் மூலம் முழு பயன் கிடைக்கும். வாயு பிரச்சனை உள்ளவராகில் இந்த யோக முத்திரையை செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad