துணியில் பட்ட சமையல் கறையை நீக்குவது எப்படி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

துணியில் பட்ட சமையல் கறையை நீக்குவது எப்படி

துணியில் பட்ட சமையல் கறையை நீக்குவது எப்படி


துணியில் கறை நீங்க ஹைட்ரஜன் பெராக்ஸைடு முறை:
துணி கறை நீங்க இது ஒரு மிகச்சிறந்த முறை லேப் கிரேடு ஹைட்ரஜன் பெராக்ஸைடு இது மிகவும் திறன் கொண்டவை, தேவையான அளவு ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி துணியில் கறை படிந்த இடம் மட்டும் ரசாயனத்தில் மூழ்கி இருக்கும் படி வைக்கவும் சுமார் 10 அல்லது 15 நிமிடம் கழித்து துணியை எடுத்து சுத்தமான நீரில் வைத்து கறை படிந்த இடத்தை நன்றாக தேய்த்து விடவும் கறை முழுவது நீங்கிவிடும்.

இம்முறையை கையாலும் போது கையுறை பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் கையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கலாம்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு 3% உள்ளவை பயன்படுத்தினாலே போதுமானது சற்று நேரம் அதிகமாக ஊற வைக்க வேண்டும்.

துணி கறை நீங்க ஒயிட் வினிகர் முறை:
துணியில் கறை நீங்க – வீட்டில் பயன்படுத்தும் ஒயிட் வினிகர் (1 பங்கு வினிகர்) (2 பங்கு தண்ணீர்) சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பஞ்சு போன்ற துணியில் நனைத்து எடுத்து கறை பட்ட இடத்தில் நன்றாக ஒத்தி எடுக்கவும். பின் சிறிது நேரம் விட்டு தண்ணீரில் அலசி விட கறை நீங்கி விடும். வினிகர் வாசம் இருந்தால் சோப்பு தூளில் ஊற வைத்து துவைத்து கொள்ளவும்.

துணி கறை நீங்க முட்டை மஞ்சள் கரு:
துணியில் கறை நீங்க – முட்டை மஞ்சள் கருவிற்கு காபி கறையை நீக்கும் தன்மையுண்டு.

ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து நன்றாக கலக்கி டெர்ரி டவல் (துண்டு) ஒரு சிறிய பகுதியை முட்டை கலவையில் நனைத்து கறை மீது தடவி விடவும் மஞ்சள் கரு கறையின் மீது படர்ந்ததும் அப்படியே சில நிமிடங்கள் விட்டு குளிர்ந்த நீரில் அலசி வழக்கம் போல் துவைக்க கறை நீங்கி விடும்.

துணி கறை நீங்க சமையல் சோடா:
துணியில் கறை நீங்க – வீட்டில் சமையலுக்கு பயன்படும் சமையல் சோடா என்ற பேக்கிங் சோடா பயன்படுத்தி கறை நீக்கலாம்.

ஆனால் மிகவும் மென்மையான மெல்லிய துணிகளுக்கும் இம்முறை பயன்படாது துணி கிழிந்து போகும்.

சற்று கடிமான துணியில் கறை படிந்து இருந்தால் முதலில் துணியை ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு கப் சூடான தண்ணீரை கறையின் மீது ஊற்றவும் பின் நன்றாக பிழிந்து எடுத்து கறையின் மீது ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடவை பரப்பி டெர்ரி துண்டால் நன்றாக தேய்த்து விடவும் (கடினமாக அழுத்தி தேய்க்க வேண்டாம்) அப்படியே 45 நிமிடங்கள் விட்டு தண்ணீரில் அலச கறை நீங்கும்.

துணி கறை நீங்க எலுமிச்சை பழ சாறு:
துணியில் கறை நீங்க – எலுமிச்சை பழச்சாறு ஒரு கப் எடுத்து கறை படிந்த இடம் மட்டும் மூழ்கி இருக்குமாறு வைத்து அப்படியே 30 நிமிடங்கள் விட்டு விடவும். பின் சாற்றை பிழிந்து எடுத்து விட்டு தண்ணிரில் வைத்து நன்றாக கறை படிந்த இடத்தை கசக்கி தேய்க்க கறை நீங்கி விடும்.

பாதிகறை நீங்கி இருந்தால் திரும்பவும் மேற்கூறிய படி செய்ய கறை நீங்கி விடும்.

 

No comments:

Post a Comment

Post Top Ad