அரசு வழங்கும் 90% மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 5, 2021

அரசு வழங்கும் 90% மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..!

அரசு வழங்கும் 90% மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..!



 நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் தமிழக அரசு வழங்கி வரும் 90% மானியத்துடன் இலவச ஆடு வழங்கும் திட்டத்தை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், இந்த திட்டத்தின் முக்கிய விதிமுறைகள், திட்டத்தின் பயன்கள், எப்படி விண்ணப்பிக்கலாம் என்ற முழு விவரங்களையும் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

ஆடு வழங்கும் துறை:
தமிழக அரசானது கால்நடை துறையின் மூலம் 90% மானியத்துடன் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வழங்கி வருகிறார்கள்.

உற்பத்தி திட்டம்:
ஆடு வழங்கும் திட்டமானது எதனால் கொண்டுவரப்பட்டது என்றால் செம்மறி ஆடு – 7.36%, வெள்ளாடு – 6.02% மட்டுமே உள்ளது.

ஆட்டின் இறைச்சி அதிகமாக தேவைப்பட்டு வருகிற நிலையில் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை அதிகரிப்பதற்காக கால்நடை பராமரிப்பு துறை சார்பாக ஊரக புறக்கடை செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆடு வழங்கும் திட்டமானது வறட்சி, பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள், தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மாநில திட்டக்குழுவினரால் தேர்வு செய்யபடுவர்.

பயனாளிகளுக்கு கிராமபுற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புறக்கடை செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டம் மூலம் செம்மறி, வெள்ளாடுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

திட்டத்தின் பயன்கள்:
ஆடு வழங்க மத்திய அரசானது 60% வழங்கி வருகிறார்கள். அடுத்து மாநில அரசு 30% மானியம் கொடுக்கிறார்கள். மொத்தமாக 90% அரசு வழங்கி வருகிறது. மீதமுள்ள 10% பயனாளிகளின் பங்காக இருத்தல் வேண்டும்.

பயனாளியின் பங்கானது நிதி முறையில் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டமானது 21 மாவட்டங்களில் 83 தொகுதிகளில் உள்ளடக்கிய கிராம பகுதிகளில் உள்ள தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப அமைக்க பெற்றுள்ளது.

யாரெல்லாம் பயன்பெறலாம்:
இந்த திட்டத்தின் மூலம் நிலமற்ற விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

சிறு குறு விவசாயிகள் பயன்பெறலாம்.

இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் பயனடையலாம்.

மேலும் விதவைகள், மாற்று திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


பயனாளிக்கு பயன்:
இந்த திட்டத்தில் 4 முதல் 5 மாத வயதுடைய 10 செம்மறி ஆடுகள் அல்லது  5 முதல் 6 மாத வயதுடைய வெள்ளாடுகளை வழங்கி வருகிறார்கள். இதனுடன் 1 ஆட்டு கிடாயும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு திட்டத்தில் ஏதேனும் ஒரு திட்டம் மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும்.

பயனாளியின் விதிமுறை:
திட்டத்தின் மூலம் ஆடுகளுக்கு 3 வருடம் வரை காப்பீடு செய்து கொடுப்பார்கள்.

அடுத்ததாக கிடாய் ஆடுகளாக இருந்தால் பயனாளிகள் 1 வருடத்திற்கு விற்க கூடாது. அதுபோன்று பெட்டை ஆடுகளாக இருந்தால் 3 வருடங்களுக்கு விற்கக்கூடாது. இதற்கு சான்றாக பயனாளியிடம் ஒப்பந்த படிவம் பெறப்படும்.

இந்த திட்டத்தில் பணம் பெற்று துறை சார்ந்து அமைக்கப்பட்டுள்ள சந்தை அல்லது ஆடு வளர்ப்போரிடம் நேரில் சென்று தரமான ஆடுகளை  நீங்களே வாங்கி வளர்க்கலாம்.

இந்த இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு ஒரு நாள் ஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சிகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் வழங்குவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்ப படிவத்தை பெற்று அவர்களிடம் விவரங்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்ட ஒன்றியம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, கடலாடி, போகலூர் போன்ற 5 ஊராட்சி ஒன்றியம் இலவச ஆடு வழங்கும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் போன்ற ஒன்றிய பகுதிகளில் இந்த திட்டமானது செயல்முறையில் உள்ளன.

கரூர் மாவட்டத்தில் பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், தாந்தோணி, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் போன்ற பகுதிகளில் செயல்முறையில் உள்ளன.

தேவையான ஆவணம்:
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமான சான்று, இருப்பிட சான்று, விதவைகளாக இருந்தால் விதவை சான்றிதல், ஊனமுற்றோராக இருந்தால் ஊனமுற்றோர் சான்றிதழ், நிலம் அற்றவர்கள் இருந்தால் அதனுடைய சான்று கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும். இந்த திட்டத்தின் மூலம் அனைவரும் பயனடைய வாழ்த்துக்கள்..!

No comments:

Post a Comment

Post Top Ad