முகத்தில் மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 5, 2021

முகத்தில் மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்?

முகத்தில் மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்?


மீசை தாடி வளர எண்ணெய்:-
மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும்? இதோ எளிய வழிகள்:- ஆண்களுக்கு மீசை வேகமாக வளர ஒரு சிறந்த எண்ணெய் இதுவே, இந்த எண்ணெயை தினமும் மீசை தாடி வளர வேண்டும் என்கின்ற இடத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் மசாஜ் செய்து வந்தால் மிக சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும். சரி வாங்க மீசை தாடி வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

மீசை தாடி வளர எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள்:-
  • வெங்காயம் சாறு – இரண்டு ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • சிறிதளவு – காட்டன் பஞ்சி
தாடி வளர எண்ணெய் செய்முறை:
ஒரு சுத்தமான பௌளை எடுத்து கொள்ளவும். அவற்றில் இரண்டு ஸ்பூன் வெங்காயச்சாறு, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பின் ஒரு காட்டன் பஞ்சியில் இந்த எண்ணெயை நனைத்து முகத்தில் மீசை மற்றும் தாடி வளர வேண்டிய இடத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் அதாவது 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு ஒரு சீப்பை எடுத்து மீசை தாடி வளர வேண்டிய இடத்தில் நன்கு அழுத்தமாக சீவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர மீசை தாடி சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும்.

மீசை தாடி வளர ஆமணக்கு எண்ணெய் / தாடி வளர இயற்கை வழி:
தாடி மீசை வளர என்ன செய்ய வேண்டும்? (meesai thadi valara) இதோ எளிய வழிகள்:- ஆண்களுக்கு மீசை மற்றும் தாடி வளர ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், இரண்டு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஒரு விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்


இந்த முறையை இரவு தூங்குவதற்கு முன் செய்வது மிகவும் சிறந்த பலனை தரும். அதாவது தாடி மீசை வளர வேண்டிய இடத்தில் இந்த எண்ணெயை அப்ளை செய்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலை சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர ஒரே வாரத்தில் மீசை தாடி (meesai thadi valara) மிகவும் அடர்த்தியாக வளர ஆரமித்து விடும்.

இந்த இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் செய்து வாருங்கள் நிச்சயம் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad