தோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 8, 2021

தோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா?

தோல்விகளால் செம அப்செட்; அரசியல் பாய்ச்சலுக்கு தயாராகிறாரா சசிகலா?


நடப்பு சட்டமன்ற தேர்தல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. இவர் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால் அதிமுகவிற்குள் நிச்சயம் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சற்றே மவுனம் காத்து வந்த நிலையில், சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் தேர்தல் முடியும் வரை மர்ம மவுனத்துடனேயே கடந்து சென்றுவிட்டார். இதற்கிடையில் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக கூறி சசிகலா ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் சுமார் 30 ஆண்டுகள் அரசியல் செய்த சசிகலாவா இப்படி? என்று கேள்வி எழுந்தது. எது எப்படியோ இந்த விஷயம் அதிமுக தலைமைக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எந்தவித சச்சரவுமின்றி சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர்.

மறுபுறம் தனது ஆன்மீகப் பயணத்துடன் அரசியல் களத்தை சசிகலா உன்னிப்பாக கவனித்து வந்தார். சரியான கூட்டணியுடன் அதிமுக எளிதில் வென்று விடும் என்று எதிர்பார்த்த சசிகலாவிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது தேர்தல் முடிவுகள். இந்நிலையில் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டு விசுவாசிகளை அழைக்க வேண்டும்.

அதிமுகவிற்கு பொறுப்பேற்க முன்வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சசிகலா மவுனம் காத்து வருகிறார். தன்னை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த டிடிவி தினகரனின் படுதோல்வியும் சசிகலாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. எனவே தற்போதைக்கு அரசியல் வேண்டாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக டிடிவி தினகரன் மகள் திருமணம் வரப் போகிறது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும். இவையெல்லாம் முடிந்தவுடன் மீண்டும் ஒரு ஆன்மீகப் பயணத்திற்கு தயாராக சசிகலா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் மீண்டும் அரசியல் பிரவேசம் இல்லையா? என்று அவரது ஆதரவாளர்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad