கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முதல் விக்கெட்; ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி!
குறிப்பாக கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. இதை காரணமாக வைத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை தன்பக்கம் திருப்ப பழனிசாமி காய்களை நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் ஏற்கனவே முதல்வர் வேட்பாளர், அதிமுக வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட விஷயங்களில் விட்டுக் கொடுத்தாகி விட்டது.
எதிர்க்கட்சி தலைவர் விஷயத்தில் விட்டுக் கொடுக்க முடியாது என்று ஓபிஎஸ் பிடிவாதம் காட்டுவதாக தெரிகிறது. இந்நிலையில் திமுகவின் பார்வை கொங்கு மண்டலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அங்கு தங்களின் செல்வாக்கை உயர்த்த வியூகம் வகுத்து வருகின்றனர். இம்மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த 6 மாதங்களில் நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் நிச்சயம் வாய்ப்பு வழங்குவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கான வேலைகளை அவர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சிக்கு வலுவான ஆட்களை தேடித் தேடி தூக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசைறையின் மாநில துணைச் செயலாளரான கோவையை சேர்ந்த விஷ்ணு பிரபு சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
No comments:
Post a Comment