எடப்பாடி சொன்ன கொரோனா பொய் கணக்கு: செந்தில் பாலாஜி சொன்ன உண்மை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 28, 2021

எடப்பாடி சொன்ன கொரோனா பொய் கணக்கு: செந்தில் பாலாஜி சொன்ன உண்மை!

எடப்பாடி சொன்ன கொரோனா பொய் கணக்கு: செந்தில் பாலாஜி சொன்ன உண்மை!
சேலம் மாவட்டத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
முதல்வரின் உத்தரவையடுத்து 12 நாட்களில் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 500 படுக்கைகள் உள்ளன. ஆனால் 3 ஆயிரத்து 800 படுக்கைகள் மட்டுமே உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஸ்டாலின் பதவி ஏற்ற 21 நாளில் நோய் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தற்போது மட்டுமே 6 ஆயிரத்து 308 பேர் சேலம் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படியென்றால் பழனிசாமி சொல்லும் கணக்கில், இதர நபர்கள் சாலையிலா உள்ளார்கள் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

7 ஆயிரம் பேர் வீட்டில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சேலத்தில் சராசரியாக ஆயிரத்து 412 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேல் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. பழனிசாமி முதல்வராக இருந்தபோது நாள் ஒன்றுக்கு 9. 95 கிலோ லிட்டர் ஆக்சிஜன் கிடைத்தது. தற்போது 27 கிலோ லிட்டர் ஆக்சிஜனை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இப்போதைய நேரத்தில் அரசியலின்றி நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைக் காக்க வேண்டும் என்பதே முதல்வரின் இலக்கு. சேலத்தில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கை இல்லை என்கிற நிலையே இல்லை. தேவையான அளவு கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனாவை வைத்து பழனிச்சாமி அரசியல் செய்கிறார். அரசுக்கு நல்ல ஆலோசனை வழங்கினால் நிச்சயமாக நாங்கள் அதை ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad